அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த வார்ன் சந்தேகத்திற்குரிய மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல நேற்று காலை தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கிய ஷேன் வார்ன் அவுஸ்திரேலியா கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார். ஆனால் அடுத்த 12 மணி நேரங்களில் வார்னேவும் மாராடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.