More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • “உக்ரைய்ன்- ரஸ்ய போர்” " திருப்புமுனை"-மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரேல்!
“உக்ரைய்ன்- ரஸ்ய போர்”
Mar 06
“உக்ரைய்ன்- ரஸ்ய போர்” " திருப்புமுனை"-மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரேல்!

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இந்த சந்திப்பு மொஸ்கோவில் நேற்று சனிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்றதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.



அத்துடன் பென்னட்டின் இராஜதந்திர முயற்சி, ஜேர்மனி மற்றும் பிரான்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும் இஸ்ரேலிய அதிகாரி கூறியுள்ளார்.



புட்டினுடனான சந்திப்பைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பென்னட் கலந்துரையாடியுள்ளார்.



மொஸ்கோ சந்திப்பின் பின்னர், பென்னட் ஜேர்மன் அதிபர்; ஓலாஃப் (Olaf Scholz.) ஸ்கோல்ஸ{டனான சந்திப்பிற்காக பெர்லினுக்கு செல்வதாக இஸ்ரேலிய அதிகாரி கூறியுள்ளார்.



போர்நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறு ஸெலென்ஸ்கி ஏற்கனவே இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.



உக்ரைய்ன் மீதான ரஸ்ய தாக்குதல்களை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கண்டித்தபோதும், அந்த நாட்டின் பிரதமர் பென்னட், நேரடியான விமர்சனத்தை தவிர்த்து வந்தார்.



இஸ்ரேல், கடந்த சில ஆண்டுகளில் ரஸ்யாவுடன் சிறந்த உறவை பேணி வருகிறது .



சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடரும் வகையில் இந்த உறவு பேணப்பட்டு வருகிறது.



இதற்கிடையில உக்ரைய்ன் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நேற்று கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்

Mar28

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே

Dec31

இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்

Feb28

உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத

Aug30

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு

Mar02

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன்

Apr29

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ

Mar24

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய

Feb02

இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Apr30

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற

Apr25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர

Apr27

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட

Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர