கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எல்லையை அடைந்துள்ளதாக அந்நகர கவர்னர் ஓலே சினெகுபோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெலிகிராமில் கவர்னர் ஓலே சினெகுபோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான உக்ரைனை எல்லையை உக்ரேனிய துருப்புகள் அடைந்துள்ளதாக ஓலே சினெகுபோவ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா எல்லைக்கு அருகே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரேனிய வீரர்கள் இருக்கும் காணொளி காட்சியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாங்கள் வந்துவிட்டோம், நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் என காணொளியில் வீரர் ஒருவர் கூறுகிறார்.பாதுகாப்பு அமைச்சகத்தின் வீடியோவை தொடர்ந்து கவர்னர் ஓலே சினெகுபோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் இருந்து ரஷ்யப் படைகளை உக்ரேனிய துருப்புகள் விரட்டியடித்து வருகின்றனர்.
கார்கிவ் நகரிலிருந்த ரஷ்ய படைகளை அவர்கள் நாட்டிற்குள்ளே உக்ரைன் படைகள் விரட்டியடித்துள்ளது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகிறது.