More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:
கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:
Jun 01
கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி குறித்த இருவரும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ள நிலையில் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது. 



திடீரென உயிரிழப்பு



கடந்த 30ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது அதில் இருவருக்கு மன்னார் - உயிலங்குளம் பகுதியில் வைத்து திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.



கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் (Photos)



 



இந்த நிலையில் குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



சம்பவத்தில் பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது 26) மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பிரேத பரிசோதனை



குறித்த இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் (Photos)



 



இதன்போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற

Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

Mar05

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா

May03

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின

Sep07

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா

Sep22

உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு

Sep12

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Jul17

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Jun08

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ

Oct04

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ