More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேலும் ரூ.15,200 கோடி நிதி இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு!
மேலும் ரூ.15,200 கோடி நிதி இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு!
Apr 14
மேலும் ரூ.15,200 கோடி நிதி இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.



பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இதையடுத்து இந்தியாவிடம் கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.



இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. அதன்படி இலங்கைக்கு 40 டன் டீசல் கப்பலில் அனுப்பப்பட்டது. மேலும் அரிசிகளையும் இந்தியா அனுப்பி வைத்தது.



நேற்று முன்தினம் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. சிங்கள புத்தாண்டையொட்டி கப்பலில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.



இதற்கிடையே இந்தியா வழங்கிய டீசல் வேகமாக தீர்ந்து வருகிறது என்றும் இந்த மே மாதத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் இந்தியாவிடம் மீண்டும் கடன் கேட்க இலங்கை அரசு முடிவு செய்தது. சமீபத்தில் இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிரிந்த மொரகொடா சந்தித்து பேசினார்.



இதில் இந்தியா-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.15,200 கோடி) வழங்க இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, இலங்கை கேட்கும் கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா உதவி வருகிறது.



இதுகுறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இலங்கை வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை தற்போது செலுத்துவதில் கால அவகாசம் கேட்டு இருப்பது கவலை அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு இன்னும் இரண்டு பில்லியன் டாலர்கள் வரை கடன் உதவி வழங்க முடியும்.” என்றார்.



இதன்மூலம் இலங்கை கேட்கும் ரூ.15,200 கோடியை இந்தியா விரைவில் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இலங்கைக்கு இதுவரை இந்தியா, அத்தியாவசிய பொருட்கள், எரி பொருளுக்கான கடன்கள், நாணய பரிமாற்றங்கள் ஆகியவற்றில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, இலங்கைக்கு ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது.



வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடனை தற்போது செலுத்த இயலாது என்றும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையே வெளிநாட்டு தமிழர்கள் நிதியுதவி அளிக்கும்படி சிங்கள தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள், நாட்டில் நிலவும் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க உதவுவதற்கு நிதியை வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.

 



இதுகுறித்து இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே கூறும்போது, “இலங்கையில் அந்நிய செலவாணியை அதிகமாக தேவைப்படும் இந்த முக்கியமான தருணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் நாட்டுக்கு உதவ வேண்டும்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec31

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட

Apr06

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட

Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த

Mar27

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Aug12

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்

Mar24

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Aug08

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு

Aug11

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா

Mar14

சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற

Mar16

மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்

Jul24

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ