நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா ஆகிய குடும்பமே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.
குறித்த குடும்பமானது நேற்று (1) நள்ளிரவு யாழ்ப்பாணம் -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து புறப்பட்டு இன்று (02) அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.