More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள்
ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள்
May 03
ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்கள் இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 





மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசியல் பீட உறுப்பினர், முன்னாள் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, மத்திய குழு உறுப்பினரும், ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலர் இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.



இதனை சுட்டிக்காட்டும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் “நாட்டை அழித்த திருடர்களின் வளையம் மொத்தமாக அம்பலமானது” என்ற தலைப்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



 



அதற்கமைய, நாட்டின் பொதுச் செல்வங்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



விசேடமாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஊழல் எதிர்ப்புக் குரல் என்பன இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிற்கு சமர்ப்பித்துள்ள மற்றும் சமர்ப்பிக்காத மோசடி மற்றும் ஊழல் ஆவணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

May26

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத

Apr04

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ

Jan15

 வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ

Aug18

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த

Apr30

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப

Sep07

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட

Apr02

காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும