More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அம்பலமானது சஜித்தின் மோசடி- பல கோப்புக்களை பகிரங்கப்படுத்திய அனுர!
அம்பலமானது சஜித்தின் மோசடி- பல கோப்புக்களை பகிரங்கப்படுத்திய அனுர!
May 03
அம்பலமானது சஜித்தின் மோசடி- பல கோப்புக்களை பகிரங்கப்படுத்திய அனுர!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.



 



அதன்படி பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேசசபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



அதன்படி இன்றைய தினம் குறித்த ஊடக சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் அங்கு பெருமளவான கோப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன



இந்த நிலையில் ஒவ்வொரு கோப்பாக அவர் தெளிவுப்படுத்தும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாசார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது.



146 செலவு அறிக்கைள். நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.



செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.



பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை.



இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார். 



.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா

Apr05

மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்

Apr03

நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்

Mar29

மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா

Jun29

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Feb01

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க

Apr11

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர

Apr09

காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம

May03

இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி

Feb22

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல

Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங