More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வயோதிப தாயின் சமுர்த்தி பணம் கொள்ளை!
வயோதிப தாயின் சமுர்த்தி பணம் கொள்ளை!
Sep 29
வயோதிப தாயின் சமுர்த்தி பணம் கொள்ளை!

சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த வயோதிப தாயின் பணம் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.



சமுர்த்தி வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 14500 ரூபா பணம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



தெல்துவ சமுர்த்தி வங்கியில் இருந்து உரிய பணத்தை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணிடம் சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த பெண் சமுர்த்தி வங்கியில் இருந்து 08 மாத நிலுவைத் தொகையுடன் பண்டாரகம களுத்துறை வீதியில் களுத்துறை நோக்கி நடந்து சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.



அவள் பின்னாலேயே வந்த சந்தேக நபர் 'அம்மாவின் அடையாள அட்டை சரியாக இருக்கிறதா என்று சமுர்த்தி மிஸ் பார்க்கச் சொன்னார்' என்று கூறியுள்ளார்.



வயோதிபப் பெண் அடையாள அட்டையைக் காட்டியவுடன் அவர் வைத்திருந்த 14500 ரூபா பணத்தைத் திருடிய சந்தேக நபர் நுககொட நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.



குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றில் கடனாக பெறப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.



அதற்கு 7000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.



பெண் சமுர்த்தி பணத்தை எடுத்த போது பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபரும் அங்கு இருந்துள்ள நிலையில் எனினும் அவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

  நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப

Jan20

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக

Sep22

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங

Jul01

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச

Feb11

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்

Oct01

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Jun09

கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Feb01

ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்

May27

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த

Mar08

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண

May12

இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி

Mar08

ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை

Mar14

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ