More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது ஜமைக்கா தலாவாஸ் அணி!
மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது ஜமைக்கா தலாவாஸ் அணி!
Oct 01
மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது ஜமைக்கா தலாவாஸ் அணி!

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றிபெற்றுஇ மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது.



கயானா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணியும் பார்படோஸ் றோயல்ஸ் அணியும் மோதின.



இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் றோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் றோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக அசாம்கான் 51 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், நிக்கோலஸ் கோர்டோன் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணிஇ 16.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.



இதற்கு முன்னதாக ஜமைக்கா தலாவாஸ் அணி 2013ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டங்களை வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் புரூக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பார்படோஸ் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக பெபியன் அலெனும் தொடரின் நாயகனாக பிரெண்டன் கிங்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

Feb23

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

May28

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற

Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Aug04

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5

Mar22

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க

Jan02

 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை

Mar20

ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை