More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு!
வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு!
Oct 02
வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு!

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் இன்று அம்பாந்தோட்டையின் தங்காலையில் நடைபெற்றது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், மூவின மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.



பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான போராட்டத்தை காங்கேசன்துறை – மாவட்டபுரத்தில் ஆரம்பித்து வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தொழிற்சங்கப் பிரமுகர் ஜோசப் ஸ்டாலின் போன்றோரும் இன்று தங்காலையில் நடைபெற்ற இறுதி நிகழ்விலும் பங்கேற்றனர்.



கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மக்களின் கையெழுத்துக்களைச் சேகரித்த பின்னர் இன்று அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையில் தனது செயற்பாட்டைத் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந

Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

Mar23

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல

Oct05

வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு

Mar10

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங

Sep20

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட

Mar13

முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந

Oct04

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு

Oct24

கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50

Mar23

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர

Sep16

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்