More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை!
மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை!
Oct 04
மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை!

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.



சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 57 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.



“We are near total breakdown”'என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, நாட்டின் உணவுப் பணவீக்கம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், வருமான இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வை முன்வைத்துள்ளது.



கடந்த ஏப்ரல் மாதம், மருந்துப் பொருட்களின் விலையை 40மூ உயர்த்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன் ஓகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் 2 ஆயிரத்து 724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



6.2 மில்லியன் மக்கள் அல்லது 28மூ மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப

Mar28

பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Oct26

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க

May13

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Jan29

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க

Oct18

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி

Jun14

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி

Oct22

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன

Jul18

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர

Sep27

தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக

Feb12

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர

Mar19

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை