நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து குறித்த தீயணைப்பு வாகனம், தீயணைப்புபடை வீரர்களால் பரிசோதித்து பார்க்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ் மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.