More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • குருந்தூர் மலை நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்!
குருந்தூர் மலை  நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்!
Oct 07
குருந்தூர் மலை நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



தாம் அறிந்த வகையில் இந்த தீர்மானம் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஒருவேளை தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துவிடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.



அதனூடாக குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ வீரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் எனவும் விமல் வீரவங்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.



அதேபோன்று குருந்தூர் மலை விகாரை வரலாற்று சிறப்பு மிக்க விகாரை எனவும் அவர் கூறியுள்ளார்.



வடக்கு மற்றும் தெற்கில் ஏதாவதொரு பௌத்த விகாரைகள் இருந்தால் அதுதொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.



அதற்கு அப்பால் இந்து போன்ற வேறு சமய தேவஸ்தானங்கள் இருந்தால் அதுதொடர்பில் யாரும் கேள்வி எழுப்புவதில்லை எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.



ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது அல்லது சமய பிரச்சினைகளை காரணம் காட்டி நாடகம் அரங்கேற்றுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.



அவர்களே அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலை மேற்கொண் டார்கள்.



குருந்தூர் மலை விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது மிகவும் தவறான விடயமாகும்



திருகோணமலை போன்ற கோவில் பிரச்சினை குறித்து யாராவது கவனம் செலுத்துகின்றனரா எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி

Feb02

 

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ

Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Sep23

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த

Mar13

திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

Jun24

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்

Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Oct21

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்

Jul16

நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர

Sep22

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்

Mar08

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள

Mar03

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப

Jan24

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி