சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் ஆகவே இந்திய பிராந்திய வல்லரசின் அனுசரனையின்றி தமிழர்களுக்கு ஒரு போதும் தீர்வு எட்டப்படாது என்பது நிதர்சனம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.