More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு!
நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு!
Oct 16
நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.



இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக வழங்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.



அனைத்து பிரதேச செயலாளர்களும் அமைச்சுக்களும் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் நிவாரணம் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.



பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, காலி, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கண்டி மற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 52 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 15404 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நிலவும் மோசமான காலநிலை காரணமாக நாடு முழுவதும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 05 வீடுகள் முழுமையாகவும் 193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட 439 குடும்பங்களைச் சேர்ந்த 1927 பேர் நாடளாவிய ரீதியில் 21 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.



இதேவேளைஇ சீரற்ற வானிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் எனவும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்காவிடின் 117 என்ற அனர்த்த நிவாரண சேவையின் துரித இலக்கத்தை அழைக்குமாறும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வலியுறுத்துகின்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Mar22

சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி

Jul17

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Mar20

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்

Jul10
Feb02

இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய

Apr03

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி

Jul05

இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத

Feb03

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Feb22

 இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ