தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ரஜினிகாந்த் வந்தார்.
தற்போது ரஜினிகாந்த் தொடர்ந்து அந்த அந்தஸ்திற்கு விஜய் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச்செழியன் அண்மையில் ப்ரின்ஸ் படத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய அன்புச்செழியன் ' தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களாக எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இருந்துள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் ' என்று கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.