More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 7568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!
 சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 7568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!
Oct 22
சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 7568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில், 7568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.



அவற்றுள் அதிகமான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. சிறுவர்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், தொழிலாளியாக பயன்படுத்தல் மற்றும் யாசகத்தில் ஈடுபடுத்தல் என்பன தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.



கம்பஹா, குருநாகல், அநுராதபுரம், கண்டி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை முதலான மாவட்டங்களிலும் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



சிறுவர் துன்புறுத்தல் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற இலக்கத்தை அழைத்து முறைப்பாடளிக்க முடியும்.



2021ஆம் ஆண்டு 11187 முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் குறித்து அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.



எனவே அறிக்கையிடப்பட்டதை விடவும் பெருமளவான சம்பவங்கள் அறிக்கையிடப்படாதுள்ளன. ஏனெனில் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு அவர்கள் விரும்பாமை மற்றும் அது குறித்து அவர்கள் அறிந்திராதிருக்கலாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே

Mar03

நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Jan12

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Jun08

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி

Jun06

சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா

Jan27

ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா

Feb26

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ

Oct02

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம

Sep23

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய

Jan26

கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்

Sep26

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம

Oct04

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம