சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காட்டாமகத் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகத் தமிழருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியின் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.