More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சூரிய கிரகணம் தொடங்கியது நேரடி காட்சி!
சூரிய கிரகணம் தொடங்கியது நேரடி காட்சி!
Oct 25
சூரிய கிரகணம் தொடங்கியது நேரடி காட்சி!

சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ளது. இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட உள்ளது. 



குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும். 



இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்பட தொடங்கியது. சூரிய அஸ்தமன நேரமான மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். 



அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும். 



இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும். 



தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். 



அடுத்த இரண்டு வாரங்களில் இரண்டு கிரகணங்கள் நிகழும். நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலையில் சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மூழ்கி முழு சந்திர கிரகணத்தை உருவாக்கும். 



இது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளிலிருந்து தெரியும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம

Sep24

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு

Jul13

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Mar27

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்

Feb24

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட

Jun07