More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
Oct 26
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



கடல் நிலை: காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன்காணப்படும்.



இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு

Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

May23

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்

Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Mar12

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம

Feb20

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம

May13

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட

May11

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி

Jan13

யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Feb01

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்

Apr02

நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத

May18

நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி

Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Jun29

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ