More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இனபிரச்சினையை ரணில் தீர்த்துவைப்பாரா..! ஆனந்தசங்கரி
இனபிரச்சினையை ரணில் தீர்த்துவைப்பாரா..! ஆனந்தசங்கரி
Dec 27
இனபிரச்சினையை ரணில் தீர்த்துவைப்பாரா..! ஆனந்தசங்கரி

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்து வைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.



இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.



சட்டவிரோதமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சம்பந்தன்



அன்று நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும்,ரணில் விக்ரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர். அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்பந்தனும் திருட்டு தனமாக நாடாளுமன்றம் சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர்.



இதனால் ரணில் தோற்றார். அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர்.சமஷ்டியை செல்லா காசாக்கினார்கள். அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள்.



2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால் சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும் தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.



எம் இனத்தை காட்டிக்கொடுத்த சம்பந்தன் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர், நாடாளுமன்றில் இருக்க தகுதி அற்றவர். இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றும் ஆகபோவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

Oct21

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் த

May01

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்

Dec29

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள

Feb23

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Jul14

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்

Feb14

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக

Feb02

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்

Mar29

மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா

Oct06

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந

Jun14

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு

Sep15

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப

Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு