More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யானந்தாவின் பிரதிநிதிகள்!
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யானந்தாவின் பிரதிநிதிகள்!
Mar 03
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யானந்தாவின் பிரதிநிதிகள்!

 நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புறக்கணித்து விட்டதாக ஐநா அறிவித்துள்ளது. இந்தியாவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்று தனித் தீவு நாட்டுக்கு அதிபர் என்று கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெனிவாவில்  ஐநா பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதிகளாக சில பெண்கள் கலந்து கொண்டனர். அதில் கைலாசாவின் நிரந்தர பிரதிநிதி விஜய ப்ரியா என்பவர், ஆன்மீக தலைவரான நித்யானந்தாவை கொடுமைப்படுத்துகின்றனர். சொந்த நாடே அவருக்கு தடை விதித்து விட்டது என்று பேசியதாக கூறப்படுகிறது.



 இதுதொடர்பான புகைப்படங்கள் வௌியாகி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. கைலாசாவை ஐநா அங்கீகரித்து விட்டதா என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன. 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள ஐநாவில் கைலாசா இடம்பெறவில்லை. ஐநாவில் இடம்பெற ஐநா பொதுசபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி வேண்டும். ஆனால் ஜெனிவாவில் செயல்படும் ஐநா மனித உரிமைகள் அமைப்பு. தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களும் பேச அனுமதி அளிக்கிறது.



இதைப் பயன்படுத்தி ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேசியதால், கைலாசாவை ஐநா அங்கீகரித்து விட்டதான ஒரு மாயத்தோற்றத்தை நித்யானந்தா ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், “கடந்த மாதம் நடைபெற்ற  ஐநா பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டத்தில் அரசு சாரா அமைப்புகளும் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  தலைப்புடன் சற்றும்  தொடர்பில்லாத கருத்துகளை கைலாசா பிரதிநிதி பேசினார். அவர் பேசிய கருத்துகளை  ஐநா சபை முற்றிலும் புறக்கணித்து விட்டது ” என்று ஐநா விளக்கம் அளித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி

Sep12

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Mar09

உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன

Oct17

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத

Jul01

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர

Aug19