More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பெரும் திரளான வெடிபொருட்கள் மீட்பு!
பெரும் திரளான வெடிபொருட்கள் மீட்பு!
Sep 17
பெரும் திரளான வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பெரும் திரளான வெடிபொருட்களை நேற்று வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.



வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதி வழங்கினார்.



இதனையடுத்து சம்பவதினமான நேற்று வாழைச்சேனை மற்றும் வாகரை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு தோண்டினர்.



இதன் போது அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்



இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul04

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்

May10

இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க

Jun10

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற

May25

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Mar23