மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறித்து ஐ.நா.வில் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பேசியது இந்தியா மட்டுமே என குறிப்பிட்டார்.
இதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு 13 ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இரா.துரைரெட்ணம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 32 வருடங்களுக்கு மேலாக அதனை புறக்கணித்ததை போன்று அல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆகவே தேர்தல் மாகாணசபை முறைமை அதிகார பரவல் என தமிழ் மக்களுக்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும் என துரைரெட்ணம் வலியுறுத்தினார்.