மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை தாம் வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிக்குள் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்தார்.