More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – பொன்சேகா
போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் –  பொன்சேகா
Sep 22
போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – பொன்சேகா

நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி,  தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஐஎம்எப் என்று மட்டும் சொல்கிறதே ஒழிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது மக்கள் வீட்டில் தங்கி கதவுகளைத் திறக்க முடியாது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



கரிம உரக் கொள்கையினால் விவசாயியும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துவிட்டது என்று கூறிய அவர்இ கோட்டாபய ராஜபக்ஷவும் கரிமக் கொள்கையினால்தான் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.



அப்படி இருந்தும் சில மக்கள் பிரதிநிதிகள் வெட்கமின்றி இன்னும் இயற்கை உரம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.



இவ்வாறான நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணம் ஊழல் அரசியல் கலாசாரத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்த ஊழல் அரசியல்வாதிகள் எனவும் இவ்வாறான ஊழல் அரசியல்வாதிகள் ஐம்பது வீதமானவர்கள் இருப்பதாகவும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.



இந்த ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



அந்த ஊழல் அரசியல்வாதிகளை வாக்கு மூலம் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்றும் ஊழல் அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு மட்டுமே பயப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ

Feb03

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த

Apr03

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க

Feb04

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப

Feb04

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Oct20

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Jun26

நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள

Sep16

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு

May31

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Aug07

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி

Mar10

வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ

Jul31

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில