வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்ற போதே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற போது படி ரக வாகனம் மோதியதிலே அந்நபர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முருகன் எனும் தங்க நகை ஒட்டும் வியாபாரியாவார்.
விபத்தில் மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படிரக சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.