கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவரே காயமடைந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவ துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகயை முடுக்கிவிட்டுள்ளனர்.