சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்திருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் , 10,000 வரை குறைந்து 151,500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 312 ரூபா 61 சதமாக காணப்பட்டதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.