மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவரது கைகள் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (21) இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டாருடன் இடம்பெற்ற தகராறின் பின்னர் 40 வயதான குறித்த நபர் தாக்கப்பட்டு, அவரின் கைகள் வெட்டப்பட்டுள்ளன.
மின்னியலாளர் தாக்கப்பட்டு அவரது கைகள் துண்டிக்கப்பட்டு எடுத்துச்செல்லப்படும் காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.