புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் புனித பாப்பரசருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் விரிவான விவரங்கள் எதையும் வத்திகான் வெளியிடவில்லை.
எனினும், திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் வழமையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.