மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தில் திடீரென பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரங்கலய போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் மிரிஹான ஜூபிலி கனுவ சந்தியில் கொண்டாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வு போராட்டமாக மாறாமல் இடுப்பதற்காக பாதுகாப்பு வழங்க 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 3000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படையின அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.