More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி
இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி
Mar 31
இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு  தொடர்பான  வழக்கு எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்  திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.



அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு   புதன்கிழமை (29)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்   எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்  விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்   திகதி வரை  மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை  கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார். 



அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்    பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் 2022 செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.



இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்  கைதான  சந்தேக நபரான பௌத்த மதகுரு  தொடர்புபட்ட  3 வழக்குகளில்  தலா 3 பேர் வீதம்,  9 பேர் கொண்ட  5 இலட்சம் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்ல வேண்டும்,    ஒவ்வொரு மாத இறுதியில்   மீண்டும் அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல், குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை   அச்சுறுத்துதல், வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை, அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும்,  அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின்    உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும், கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும், என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த  பௌத்த மதகுரு  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில்   இவ்வழக்கு  மீண்டும்   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்    திகதி வரை வழக்கினை  நீதிவான் ஒத்தி வைக்க  உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு

Mar08

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த

Oct01

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத

Sep25

அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ

Jan19

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு

May30

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Sep20

2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ

Oct19

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்

Mar04

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங

Sep12

நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின

Feb10

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந

Dec13

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

Sep24

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப