More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிளிநொச்சியில் மினி சூறாவளி - 301 பேர் பாதிப்பு!
கிளிநொச்சியில்  மினி சூறாவளி - 301 பேர் பாதிப்பு!
Apr 03
கிளிநொச்சியில் மினி சூறாவளி - 301 பேர் பாதிப்பு!

கிளிநொச்சியில் நேற்று (02)   பிற்பகல்   ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக   மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.



இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.



இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.



மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.



குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.



கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.



குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்

Jun30

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ

Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Feb10

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில

Apr01

பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற வா

Feb05

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி

Mar12

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த

May26

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Sep26

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா

Oct07

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்

Feb05

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

May29

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட

Mar03

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட