More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர
சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர
Apr 05
சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராகவே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர

புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ஏனைய தரப்பினருக்கு அல்ல என தாம் கருதுவதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.



பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.



அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை 'வடுநங்கல' பகுதி எனக் குறிப்பிட்ட அவர், வடுநங்கல பகுதியில், விகாரையில், பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை 1970 ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.



1940 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, 1815 ஐ விடவும் பழமையான அனைத்தும், கட்டாயமாக, சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொல்பொருளுக்கு சொந்தமானதாகும்.



அதில் தலையீடு செய்யவோ, சேதமாக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அந்த விகாரைக்கு அருகாமையில், 11 குளங்கள் இருந்துள்ளன.



2018 ஆம் ஆண்டில், அவை சேதமாக்கப்பட்டு, வனம் அழிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுதான், அங்கு சிவன் ஆலயம் உருவாக்கப்பட்டது.



இதேபோன்றுதான், குறுந்தூர் விகாரையிலும் இடம்பெற்றது. இதுதான் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையா?



தமிழ் இனவாத அரசியல்வாதிகளே, இனவாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர்.



இனப்பிரச்சினை உள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நாட்டில் அவ்வாறு இனப்பிரச்சினை இல்லை.



பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையை மீறி செயற்பட வேண்டாம் என தாம் கூறுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



இதற்கு எதிராக தாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு

Oct21

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள

Sep19

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த

Feb08

ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Jan13

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த

Jul24

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ

Sep29

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி

Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

May13

அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத

Jan29

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு

Jul20

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ

May02

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத