More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?
Apr 05
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப் : கைதாகி பின்னர் விடுதலை - நடந்தது என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்தார். 



இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் நடிகை ஸ்டார்மியின் இந்த தகவலால் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. 



இதையடுத்து இவ்விவகாரத்தை பற்றி ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடி டிரம்ப் கொடுத்தார். அந்த பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 



இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 



இதையடுத்து நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. கோர்ட்டில் ஆஜராக புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்குக்கு டிரம்ப் வந்தார். பின்னர் கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் அவர் கைது செய்யப்பட்டார். 



அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் விசாரணை தொடங்கியது. 



டிரம்ப் தனது வக்கீல்களுடன் நீதிபதி முன்பு அமர்ந்திருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டிரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார். 



தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் கோர்ட்டில் இருந்த டிரம்ப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியேறிய அவர் புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க

May09

கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி

Jul03

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு

Apr26

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்

May14

சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ

Apr01

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க

Jul11

ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க

Jan17

துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ

May23

மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச

Jun10

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து

Feb07

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்

Mar08

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில

Jun11