கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்போபுரா பகுதியில் வைத்து மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.