More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல்!
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல்!
Jan 18
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல்!

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை நாடு கடத்தும் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றார். அதற்கு முன்பு, 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் அவருக்கு எதிராக தேடப்படும் நோட்டீசுகளை சி.பி.ஐ. வெளியிட்டது.



முதல் நோட்டீசில், விஜய் மல்லையா தப்ப முயன்றால் சிறைபிடிக்குமாறும், 2-வது நோட்டீசில் அவரது நடமாட்டம் பற்றி தகவல் தெரிவித்தால் போதும் என்றும் விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.



இந்த 2 வெவ்வேறு நோட்டீசுகளும் எந்த விதியின் கீழ் வெளியிடப்பட்டது என்று சி.பி.ஐ.யிடம் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற தகவல் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்தார். ஆனால், அந்த தகவலை அளிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் விகார் துர்வே விண்ணப்பித்தார். அவர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun19

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப

Sep17

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க

Dec28

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Jul24

 தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Jan01

வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்

Aug18