இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (28) முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் சிவரூபன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகணப் பணிப்பாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பாலித்த, வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.டி.சி. காமினி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ சுகானி, வவுனியா மற்றும் செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

