More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்!
தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்!
Jan 26
தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்!

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.



இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.



ஆட்டநேர முடிவில் பவாட் அலாம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.



தென்னாபிரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.



கராச்சி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 58 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், யாசிர் ஷா விக்கெட்டுகளையும் நயுமான் அலி மற்றும் ஷாயின் ஷா அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ஓட்டங்களை பெற்றது.



இதன்போது இம்ரான் பட் 9 ஓட்டங்களுடனும் அபிட் அலி 4 ஓட்டங்களுடனும் பாபர் அசாம் 7 ஓட்டங்களுடனும் ஷாயின் ஷா அப்ரிடி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.



தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ராபாடா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளுக்காக பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct30

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண

Mar14

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு

Sep21

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப

Oct19

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா

Jul26

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர

Mar30

ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப

Mar14

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம

Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Feb27

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ

Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Apr16

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக