நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இருக்கும் ஒளிப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் ‘நடிகையர் திலகம், ‘நோட்டா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் ஒரு பொலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.