பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இதன்படி இரு மருத்துவர்கள், மூன்று தாதியர்கள், ஆறு கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சைக்காக குறித்த நோயாளி வந்தபோதே அவர் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நோயாளர் எவரும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளர்களின் பிசிஆர் முடிவுகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர் ஜெயசூரிய தெரிவித்தார்.