மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை நகர சபைத் தவிசாளரை பதவி நீக்கி விசேட வரத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நகர சபைத் தவிசாளர் 20 ஜனவரி 2021 முதல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட நகர சபைக் கட்டளைச் சட்டத்தின்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் நகர சபைத் தவிசாளர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.