More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்!
Jan 30
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றும் ஏற்பட்டது. 



எனவே, விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது.



சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது.



இந்நிலையில், கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 3 தினங்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.



எனவே, மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா பெங்களூருவில் பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.



பிப்ரவரி 3 அல்லது 5-ந் தேதி காரில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில், தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள

Dec31

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்

Aug14

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய

Jun04

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ

Mar09

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Jan24

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில

Jun15