வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த செயின்களை அறுத்துச்சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 9 பவுண் தங்க நகைகள் மற்றும் கைக்குண்டு, வாகன இலக்கத்தகடுகள், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் அழகியவண்ணவின் வழிகாட்டலில் சாயன்களான திசாநாயக்க, விக்கிரமசூரிய, குமணசேகர, சதுரங்க, கான்ஸ்டபிள்களான தயாளன், ரணசிங்க, தம்மிக, சமீர, மொறவக்க, அமரசூரிய ஆகியோர்களை கொண்ட காவற்துறை குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

