More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்!
விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்!
Feb 01
விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்!

வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.



கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.



இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்

Jun07
Feb02

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Sep19

நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்

Jul14

பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற

Sep29

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி

Jan18

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி

Feb06

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல

Feb21

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச

Jan12

தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி

Jan15

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி