ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம் மசோதாவினைத் தாக்கல் செய்தார். இம் மசோதா உடனடியாக அமுலுக்கு வருமெனக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஒன்லைனின் ரம்மி விளையாடினால் இந்திய மதிப்பில் 5,000 ரூபா அபராதம்,மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.