கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று (07) அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த வைத்தியரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.
கொரோனா தொற்று பீடிக்கப்பட்ட குறித்த வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்தவாரம் உயிரிழந்திருந்தார். அவர் ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்திருந்தார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி நிகழ்வில் அரச அதிபர் சமன் பந்துலசேன, வைத்தியர்களான சுதாகரன், மதுரகன், நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், சிறுவர் நன்னநடத்தை அதிகாரி கெனடி, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


