More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!
பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!
Feb 12
பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்’  என ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால்  சர்வதேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த 12வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.



ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “ஐ.எஸ். அமைப்பின் புதிய தளபதி ஷிஹப் அல் முஹாஜிர், இந்தியா, ஆப்கன், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்கனில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 2200 பேர் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்த அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய துாதர்  டி.எஸ்.திருமூர்த்தி   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஐ.எஸ். பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது.



பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல அமைப்புகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன.இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் தான் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முழுமையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ

Jun23

மகாராஷ்டிராவில் உருமாறிய 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் 

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

May30

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம

Jan31

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்

Jun08

  சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல

Aug28

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி

Sep09

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்

Mar14

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த

Mar12

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங

Mar28

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு

Feb27

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர